யாழ் பளையில் ஜேர்மன் அங்கிளுடன் நிர்வாணமாக மனைவியை நேரில் கண்ட கணவன்!! நிர்வாணமாக அங்கிள் வயல்வெளியால் ஓட்டம்!!
பளைப் பகுதியில் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் 56 வயதான நபர் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குடும்பப் பெண் ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்த காரணத்தால் பெண்ணின் கணவரால் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர் வந்த காரும் அப்பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ளதாகத் தெரியவருகின்றது. நிர்வாணமாக காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் கொழும்பில் வசிப்பவர் எனவும் அவரது பிள்ளும் மனைவியும் வெளிநாட்டில் உள்ளதாகவும் அவரும் வெளிநாட்டில் வசித்து வந்த பின்னரே கொழும்பில் தங்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது. பளைப் பகுதியில் குறித்த நபருக்கு பல ஏக்கரில் தென்னை மற்றும் மாமரங்கள் போன்ற பயிர்வகைகள் இருப்பதாகவும் அவற்றை பராமரிப்பதற்காக அப்பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பத்திடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் குறித்த நபர். மாதத்துக்கு ஒரு தடவை அங்கு வந்து தங்கியிருந்துவிட்டு செல்வது வழமை என்றும் நேற்று மாலை குறித்த நபர் கொழும்பில் இருந்து அங்கு வந்து தங்கியிருந்துள்ளார். தனது தோட்டத்தை மேற்பார்வை செய்யும் இளம் குடும்பத்தலைவரிடம் மதுபாணம் வாங்கிவர பணம் கொடுத்த பின்னர் அவரது வீட்டில் 2 வயதுக் குழந்தையுடன் தனித்திருந்த 25 வயதான இளம் குடும்பப் பெண்ணுடன் அந்தரங்கத் தொடர்பை பேணியுள்ளார். இந் நிலையில் கணவர் தனது மோட்டார் சைக்கிள் ஆவணத்தை பெறுவதற்காக திடீரென வீட்டுக்கு வந்த போது மனைவியையும் கொழும்பு அங்கிளையும் நிர்வாண நிலையில் தவறான முறையில் கண்டு கடும் கோபம் அடைந்து நிர்வாண நிலையில் நின்ற கொழும்பு நபரை அப்பகுதி முழுவதும் துரத்தித் துரத்தித் தாக்கியுள்ளார். தலையில் கடும் காயம் அடைந்த நிலையில் அங்கிள் அப்பகுதி வயல் வெளிக்கூடாக தப்பிச் சென்று விழுந்து கிடந்துள்ளார். இந்த சம்பவங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த அப்பகுதியில் தோட்டங்களை வைத்திருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் அவரை காயங்களுடன் மீட்டு உடையும் அணிவித்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அவரது ஜேர்மனிப் பாஸ்போட் மற்றும் வாகனத்துக்குரிய ஆவணங்கள் சிதறிக் காணப்பட்டதாகவும் அவற்றை கணவன் வந்து பொறுக்கிச் சென்றதுடன் அவரது வாகனத்தையும் அடித்து நொருக்கியுள்ளார். இதே வேளை மனைவியின் அலறல் சத்தம் தொடர்ந்து கேட்டதாகவும் அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

