கனடா கார்விபத்தில் யாழ் இணுவில் நமிர்தலதா நசுங்கிப் பலி!! (Photos)
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பப் பெண்ணொருவர், கனடாவில் கார் மோதி உயிரிழந்துள்ளார்.
கனடாவின், மிசிசாகா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
எக்ளிண்டன் அவென்யூவின் வடக்கே உள்ள டிக்ஸி ரோடு மற்றும் ஐம்கோ பவுல்வார்டுக்கு அண்மையில், தனது வீட்டிலிருந்து காரை வெளியே செலுத்தி வந்தவர், நடந்து சென்ற பெண்ணை மோதித்தள்ளியுள்ளார்.சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் அவரை காரின் அடியிலிருந்து மீட்டெடுத்த போதும், அவர் உயிரிழந்திருந்தார்.
யாழ்ப்பாணம், இணுவில் கிழக்கை பிறப்பிடமாக கொண்டு, தற்போது கனடாவில் வசிக்கும் நமிர்தலதா பாலசிங்கம் (56) என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்தியவர் அந்த இடத்திலேயே நின்றிருந்தார்.

