கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்த PPT பேரூந்து அதி வேகம் காரணமாக விபத்து!! (Photos)ஒருவர் பலி!! பலர் படுகாயம்!! (Photos)

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து (AC bus) மதவாச்சிக்கும் இகிரிகொல்லாவக்கும் இடைப்பட்ட வளைவில் 145 வது மைல் கல்லிற்கு அருகில் உள்ள வளைவில் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது பஸ் உருண்டு அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்துள்ளது. இதன்போது பஸ்ஸில் பயணித்த பலர் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் ரம்பேவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பேரூந்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகள் போதைப் பொருள் பாவனையாளர்கள் எனவும் பல தடவைகள் இந்தச் சேவையில் உள்ள பஸ்கள் பெரும் ஆபத்துடனான வேகத்தில் செல்வதாகவும் பயணிகள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

May be an image of 1 person and outdoors May be an image of 1 person and text that says "XPRESS"May be an image of tree and outdoorsMay be an image of bus

error

Enjoy this blog? Please spread the word :)