யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கி முதியவர் மரணம்!

யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்குத் தெரு பகுதியில் கடந்த 06ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருந்த ஊர்காவற்றுறை தம்பாட்டியைச் சேர்ந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, லேணர்ஸ் வாகனம் மோதியபோதே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

சம்பவத்தில் படுகாயம் அடைந்திருந்த தம்பாட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி இலட்சுமணன் என்ற முதியவரே படுகாயம் அடைந்திருந்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்றி இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன் வியாபாரியான தம்பாட்டிக்கிராமத்தின் பாரம்பரிய கூத்துக் கலைஞரான அவர் கிராமத்தில் பாடல் பாடுவதிலும் வல்லவராக விளங்கியதுடன் சமூக மட்டச் செயற்பாடுகளிலும் முன்னின்று செயற்பட்டுவந்துள்ளார்.

ஆளுமை மிக்க செயற்பாட்டாளரான சின்னத்தம்பி இலட்சுமணனின் இழப்பு கிராமத்திற்கு பேரிழப்பு என்று கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

error

Enjoy this blog? Please spread the word :)