யாழ்ப்பாணம் நல்லூர் -கோவில் வீதி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது (Photos)
யாழ்ப்பாணம் நல்லூர் -கோவில் வீதி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று (02) இடம்பெற்றுள்ளது.
வீட்டில் மதிய உணவு தயார்படுத்திக் கொண்டிருந்த சமையம் அடுப்பு தீப்பிடித்து வெடித்துள்ளது. எனினும் சிலிண்டரில் வெடிப்பு ஏற்படவில்லை.
இதேவேளை நேற்று (01) அராலி (ஜே/163 ) கிராம சேவையாளர் பிரிவில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது அடிப்பு வெடித்துள்ளது. இவற்றுடன் யாழ்ப்பாணத்தில் 4 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை நேற்று இரவும், இன்று (02) காலையும் கம்பஹா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மூன்று பிரதேசங்களில் மூன்று சமையல் எரிவாயு அடுப்புகள் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொசோவிட்ட பிரதேசத்திலும், வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீன்தெனிய பிரதேசத்திலும், பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹன்சகிரிய பிரதேசத்திலும் இடம்பெற்றுள்ளன.
இந்த வெடிப்பு சம்பவங்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

