அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட செய்தி!!
?அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட செய்தி ?
நாட்டின் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டிய சட்டவிதிகள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. இதில்…
?வாய்மொழி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ பொதுமக்களுக்கு இடையில் பயத்தையோ அமைதியின்மையையோ ஏற்படுத்தக் கூடிய வதந்திகள் பொய்யான தகவலை பரப்புதல் தண்டனைக்குரிய குற்றம் என அரசாங்க திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
?இந்த ஒழுங்கு விதிகளை மீறுபவர்களுக்கு 3 மாதங்களுக்கு குறையாததும் 5 ஆண்டுகளை விட அதிகரிக்காததுமான சிறைத்தண்டனையும் குற்றப்பணமும் தண்டனையாக விதிக்கப்படும் என அரசாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் திணைக்களப் பணிப்பாளர் நாலக ஹலுவில தெரிவித்துள்ளார்.
?யுத்தம் பாரபட்சம் எதிர்ப்பு எதிர்ப்பு உணர்ச்சி அல்லது வன்முறையை தூண்டுவதாக அமையும் தேசரீதியான மதரீதியிலான இனரீதியான பகைமையை ஆதரித்தல் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டு ஒழுங்கு சட்டத்தின் கீழ் 10 வருடங்களுக்கு உட்பட்ட சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
?எவரேனும் ஒருவர் வாய்மொழி மூலம் அல்லது வாசிக்ககூடிய சொற்கள் மூலம் அல்லது செய்கைகள் மூலம் அல்லது கட்புலன் மூலம் காட்டப்படும் காட்சிகள் மூலம் வேறு வகையான செய்கைகள் மூலமோ சமூகத்துக்கிடையில் அல்லது இனக்குழுக்களுக்கிடையில் அல்லது சமய குழுக்களுக்கிடையே வன்முறையை தூண்டுபவர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும் என அரசாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(எனவே இங்கு முகப்பு புத்தகத்தில் தகவலை வெளியிடுவோர் தேவையற்ற இனவாத கருத்துக்கள் வெளியிடாது அவதானமாக இருங்கள்)