கிசு கிசு

கணவரையும், குழந்தையையும் கொன்று புதைத்த இளம் மனைவி

தமிழகத்தில் கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா (25). இவரும் தீபிகா என்ற பெண்ணும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு பிரனீஷ் (1) என்ற குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த 13ம் திகதி முதல் தனது கணவர் மற்றும் குழந்தையை காணவில்லை என தீபிகா நேற்று பொலிஸ் புகார் அளித்தார்.

இது தொடர்பாக பொலிசார் தீபிகாவிடம் கூடுதல் விபரங்களை கேட்ட போது அவரின் பேச்சில் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில் ராஜா மற்றும் பிரனீஷை கொலை செய்து, வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரையில் புதைத்ததாக கூற பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் உடல்களை புதைத்ததாக தீபிகா கூறிய இடத்தில் இருந்து துர்நாற்றம் வரும் நிலையில், அங்கு தோண்டிப் பார்க்க பொலிசார் முடிவுசெய்துள்ளனர்.

இதனிடையே கணவர் நாள்தோறும் குடித்துவிட்டுவந்து சித்திரவதை செய்ததாகவும், இதனால் வேறு வழியின்றி கொலை செய்ததாகவும் தீபிகா வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது.

ராஜாவை கொன்ற பிறகு கொலையாளியின் பிள்ளை என பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால் குழந்தையையும் கொலை செய்ததாக தீபிகா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.