யாழில் இலையான்கள் மொய்க்க மொய்க்க வடை விநியோகிக்கும் ஆனைக்கோட்டை சிறிமுருகன் வடைக்கடை!!
யாழ் ஆனைக்கோட்டை சிறிமுருகன் வடைக்கடை மிகுந்த சுகாதாரக்கேடான முறையில் இயங்கி வருவதாக அங்கு சென்ற பலரும் விசனம் தெரிவித்துள்ளார்கள். அங்கு பணிபுரியும் பணியாட்கள் சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதாகவும், கடையில் பெருமளவு இலையான்கள் மொய்த்த வண்ணம் உள்ளதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் வெற்றுக் கைகளாலேயே வடையை எடுத்து தட்டில் வைத்து கொடுக்கின்றார்கள் என்றும் தெரியவருகின்றது. கை, கால்களில் புண்களுடன் வயோதிபர் ஒருவரும் வெற்றுக் கைகளால் அந்தக் கடையில் வடைகளை அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து வருகின்றார் என்றும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அங்கு செல்பவர்கள் கேட்கும் உணவுப் பொருட்களை கொடுக்காது பல உணவுப் பொருட்களையும் தட்டில் வைத்து கொடுத்த பின், அவர்கள் தொட்டுப் பாா்த்து சாப்பாடாது விடும் வடைகளையும் மீண்டும் அடுத்தவர்களுக்கு விநியோகிப்பதாகவும் அங்கு சென்ற பலரும் தெரிவித்துள்ளார்கள்.