புதினங்களின் சங்கமம்

திருகோணமலை குறிஞ்சாக்கேணிப் பகுதியில் படகு கவிழ்ந்து பாரிய விபத்து! மாணவர்கள் பேரின் சடலங்கள் மீட்பு! (Video)

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்திற்கு உட்பட்ட குறிஞ்சாக் கேணிப் பகுதியில் மாணவர்களுடன் பயணித்த படகுப் பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 07 ஆக அதிகரித்துள்ளது. ஏழு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கிண்ணியாவிலிருந்து குறிஞ்சாக்கேணிப் பகுதிக்கு ஆறு ஒன்றின் ஊடாக வழமைபோல மாணவர்களை ஏற்றிச் சென்றபோதே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.