பெண்கள்

குறியுடன் பிறப்பதால் மட்டுமே ஒருவன் ஆணாகிவிட முடியாது!! கஜேந்தினி கூறுவது என்ன?

Jkajenthini  என்பவரது முகப்புத்தகப் பதிவில் இருந்து இதனைத் தந்துள்ளோம்….
தன் முயற்சியில் தான் அடைய வேண்டிய குறிக்கோளை நோக்கி உழைப்பவனே
ஆண்மகன்…
திருமணத்தை வியாபாரமாகக் கருதாமல்
மனைவியை முதலீடாக எண்ணாமல்
தன்னை நம்பி வந்த பெண்ணிடம் ஒரு குண்டுமணியும் எதிர்பார்க்காதவனே
சிறந்த ஆண் மகன்…
ஊரார் மெச்சும்படி பேர் எடுப்பவன் மட்டும் ஆண்மகன் அல்ல
தன் பெற்றோர் மனம் குளிரும்படி அவர்களை வாழவைப்பவனே சிறந்த ஆண்மகன்.
தன்னை சுற்றியுள்ள பெண்களின் இருப்பையும் அவர் தன் மாண்பையும் மதிப்பவனே
ஆண் மகன்களுள் சிறந்தவன்…
மனைவியை உடலாக மட்டும் எண்ணாமல்
அவள் மீது வன்முறையை ஏவாது
அவள் விரும்பாமல் அவளை தொடக்கூட தயங்கும் தன்மை கொண்டவனே
சிறந்த ஆண்மகன்…
வியர்வையை அணிகலனாக அணிந்து
அதன் நாற்றத்தை நறுமணமாகப் பூசி
தனது இல்லாத கர்ப்பபையில்
குடும்பத்தை சுமந்து வருபவனே
சிறந்த ஆண்மகன்…
குடி புகை தரும் போதையை விட
தன் மக்களின் சிரிப்பில் அவர்தம் மகிழ்ச்சியில் உச்சியை அடைபவனே
சிறந்த ஆண்மகன்…
தனது கனவு
தனது ஆசை
தனது முயற்சியோடு இல்லாமல்
தன் வாழ்க்கை துணையின் கனவு
அவளின் ஆசை
அவளின் முயற்சிக்கும் ஊன்றுகோலாய்
உடன் நிற்பவனே
சிறந்த ஆண்மகன்…
மீசை வளர்ந்துவிட்டதால் மட்டுமே ஒருவன் ஆண்மகன் ஆகிவிடுவதில்லை..
திருமணமாகி மனைவி வயிற்றில் குழந்தையை தந்துவிட்டதாலேயே ஒருவன் ஆண்மகன் ஆகிவிடுவதில்லை..
கால் வயிறு கஞ்சியானாலும் சரி
ப்ளாட்பாரப் புடவையானாலும் சரி.
ரப்பர் வளவியானாலும் சரி
புறாக்கூண்டு வீடானாலும் சரி
தனது உழைப்பில்
தனது சம்பாத்தியத்தில்
குடும்பத்தை நடத்தும்
அத்தனை இளைஞர்களும்
ஆண்மகன்களே..
இன்னும் எண்ணற்ற கடைகளில்
டீ ஆத்தி
பார்ட் டைம் வெய்ட்டராக வேலை பார்த்து
இன்னும் பஞ்சம் பிழைக்க வெளிநாடுகளுக்குப் பறந்து
கடலோடிகளாய் நாடோடிகளாய்
இளமையை மறந்து
நாடு வீடு ஊர் சுற்றம் துறந்து
வெளிநாடுகளில் வாழும்
தங்கள் குடும்பத்திற்காக ஓடாய்த்தேயும்
அத்தனை இளைஞர்களும்
ஆண்மகன்களே..
வீரம்
வலிமை
திறமை
இவற்றால் ஒரு ஆண்மகன் உருவாகுவதில்லை.
தியாகம்..
உழைப்பு ..
கண்ணியம் ..
இம்மூன்றுமே ஒருவனை ஆண்மகனாக மாற்றுகிறது.
அனைத்து ஆண்மகன்களுக்கும்

வாழ்த்துகள்