புதினங்களின் சங்கமம்

யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்தியகல்லூரி உப அதிபர் திடீர் மரணம்! கல்லூரி முடக்கப்படுமா?

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் மீசாலை வீரசிங்கம் மத்தியகல்லூரி உப அதிபர் ஐ.குணசீலன் திடீர் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாகி காலமாகியுள்ளதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று இரவு திடீர்ப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது அவர் இடைநடுவே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இதனிடையே,

மீசாலை மத்தியகல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் உடல் நிலைப் பாதிப்பு காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அவருடைய மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து வீரசிங்கம் மத்தியகல்லூரியில் குறித்த மாணவி பயிலும் வகுப்பு கற்றல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக கல்லூரித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே குறித்த கல்லூரியின் உப அதிபர் இன்று பகல் வைத்தியசாலைக்குச் சென்று தன்னை அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவருக்கு தொற்று இல்லை என்று மருத்துவ அறிக்கை முடிவுகள் தெரிவித்திருப்பதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதிலும் மாணவி ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ள நிலையில் உப அதிபரின் மரணம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் பெற்றோர் மாணவர்களை கல்லூரிக்கு அனுப்ப அச்சம் வெளியிட்டிருப்பதாக தெரியவருகிறது.

இந்நிலையில் கல்லூரி தற்காலிகமாக முடக்கப்படுமா? என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.