புதினங்களின் சங்கமம்

இந்தியாவிலிருந்து வந்து நகை செய்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது!!

இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு
இந்திய பிரஜைகளை இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவிலில் இருந்து மூன்று மாத சுற்றுலா விசாவில் இரு இந்தியவர்கள் இலங்கைக்கு
வந்துள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைகள் செய்யும் தொழிலகத்தில்
நகை செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு சென்று விசாரணைகளை
நடத்தியபோது அவர்கள் சுற்றுலா விசாவில் வந்து தொழிலில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.