இலங்கையில் இன்றும் மூவர் கொரோனாவுக்கு பலி!
இலங்கையில் இன்றும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் இலங்கையில் கொரோனாத் தொற்று மரண எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் கந்தானையைச் சேர்ந்த ஆண் (வயது 70), கொழும்பு 12 ஐச் சேர்ந்த பெண் (வயது 74), கொழும்பு 13 ஐச் சேர்ந்த ஆண் (வயது 48) என்று தெரியவந்துள்ளது.

