முகத்திற்கு கிறீம் பூசுபவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்களைத் தருகின்றார் வைத்திய நிபுனர் Dr. தனுஷா பாலேந்திரன்
எதேர்ச்சையாக கண்ணில் பட்ட முக்கியமான பதிவு.
கடந்த மார்ச் மாதம் Dr.Thanushah Balendran, தோல் நோய் விஷேட வைத்திய நிபுணர், போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு அவர்களால் இடப் பட்ட பதிவு. ஆனால் பதிவை பார்த்தவர்கள் மிகக் குறைவு என்பதால் மீழ் பதிவிடுகின்றேன்..
Skin whitening
Myths and Facts
நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய மற்றொரு முக்கியமான பகுதி தோல் நிறம் (skin colour) பற்றியதாகும்.
தோலின் தன்மை மற்றும் நிறத்தை வைத்து 6 வகைகளாக பிரிக்கலாம்.
இலங்கையர்கள் பெரும்பாலும் தோல் வகை 4 மற்றும் 5 க்குள் வருகிறோம்.
நமது நாடு ஒரு வெப்பமண்டல நாடு என்பதால் வெப்பநிலை மற்றும் சூரியனில் இருந்து வெளிப்படும் பல்வேறு கதிர்களிலிருந்து பாதுகாக்க நமது தோல் brown நிறத்தில் காணப்படுகின்றது..
இப்பொழுதெல்லாம் பெரும்பாலான இள வயதினர் பல்வேறு கிரீம்கள், மாத்திரைகளை பயன்படுத்தி நிறமானவர்களாக (fair) மாற முயற்சிக்கின்றனர், சில சமயங்களில் ஊசி மருந்துகளையும் கேட்கிறார்கள்.
தேவையற்ற, பதிவுசெய்யப்படாத whitening கிரீம்களை பயன்படுத்துவதன் அபாயங்கள் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?
1. பதிவு செய்யப்படாத பொருட்கள் நிறைய சந்தையில் இலகுவாக கிடைகின்றன, அவற்றில் அதிகளவில் நச்சு மற்றும் கன உலோகங்கள் ( உதாரணமாக பாதரசம்) மற்றும் ஸ்டெராய்டுகள் (steroids) உள்ளன.
ஆரம்பத்தில் அவை உங்கள் சருமத்தை வெண்மையாக்குவது போல் தோன்றினாலும், காலப்போக்கில் நீங்கள் கட்டுப்படுத்த முடியாத முகப்பரு, தோல் கருமை அடைதல், அதிகமான முடி வளர்ச்சி முகத்தில் ஏற்படுதல், தோல் மெலிந்து, சுருக்கமடைதல் ஏற்படுவதுடன் இறுதியில் தோல் வயதான தோற்றத்தை அடைந்து விடும்.
2. வெண்மையாக்கும் விளைவால் மெலனின்(melanin) ஆல் நமக்கு இருக்கும் இயற்கையான பாதுகாப்பை நீங்கள் இழப்பீர்கள், எனவே உங்கள் தோல் எளிதில் புற ஊதா கதிர்களால் சேதமடையும்.
இதனால் தோல் விரைவாக தோல் வயதான தோற்றத்திற்கு செல்ல வழிவகுக்கிறது, மேலும் காலப்போக்கில் தோல் புற்றுநோயும் ஏற்படலாம்.
சில வெண்மையாக்கும் மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகள் காரணமாக, கடுமையான மருந்து ஒவ்வாமை ( allegy, drug reactions), சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் போன்றனவும் ஏற்படக்கூடும்.
நான் வெண்மையாக்கும் அனைத்து தயாரிப்புகளையும் எதிர்க்கவில்லை. மருத்துவ ரீதியாக நானும் சில தோல் கோளாறுகளுக்கு சில depigmenting கிரீம்களை பரிந்துரைக்கிறேன்.
ஆனால், பதிவு செய்யப்படாத தேவையற்ற வெண்மையாக்கும் கிரீம்களைப் பயன்படுத்த வேண்டாம்.
எமது நகரத்தில் உள்ள fancy கடைகளின் show case களில் அவ்வாறான பல கிரீம்கள் காணப்படுகின்றன.
நீங்கள் கிரீம்களை வாங்குவதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள்.
ஏனெனில், இப்போது வரை, தேவையற்ற வெண்மையாக்கும் கிரீம்களை பயன்படுத்திய பிறகு பல பிரச்சனை ஏற்பட்டு வந்த நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு நான் சிகிச்சை அளித்துள்ளேன்.
உங்களுக்கு தேவையானது ஆரோக்கியமான தோல் மற்றும் நிறம் மட்டுமே.
What you need is a healthy even tone skin, not the fair tone alone.
Beauty is being comfortable in your own skin….
உங்களுக்கு தோல் பிரச்சினை இருந்தால், தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
Comment your thoughts below….
Share to your friends tooo…….
follow me for further skin care advices…………
——————————————————
இன்றைய பதிவின் தொடர்ச்சி….
Whitening creams and it’s side effects…
எத்தனை முறை சொன்னாலும், இளவயத்தினர் முகத்தை வெண்மையாக்கும் கிறீம்களின் பின்னால் செல்வது வழக்கம் போலவே தொடர்கிறது.
கடைகளில் கிடைக்கும் தரமற்ற whitening கிரீம்களினால் ஏற்படும் சரும பக்க விளைவுகளை ஒவ்வொன்றாக படங்களாக பதிவிடுகிறேன்.
பார்ப்பதோடு மட்டுமல்லாது மற்றயவர்களுக்கும் அறிவுறுத்துங்கள்
படம் 2 – Perioral dermatitis என்று சொல்லப்படும் வாயை சுற்றி ஏற்படும் அழற்சி
Dr. தனுஷா பாலேந்திரன்
MBBS, MD
Dermatologist

