இங்கிலாந்தில் சாத்திரம் சொல்லும் கோயில் ஐயர் பல ஈழத் தமிழ்க் குடும்பப் பெண்களுடன் அந்தரங்கம்!!
இங்கிலாந்தில் உள்ள பிரபல நகரம் ஒன்றில் பிரபல கோவிலில் உதவி பூசகராக இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த 50 வயது நபர் சாத்திரம் பார்ப்பது என்ற போர்வையில் ஈழப் பெண்களுடன் அந்தரங்க தொடர்பைப் பேணி வருவதாக அதே கோவிலில் உதவியாளராக இருக்கும் ஒருவர் பரபரப்புத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். நவராத்தி , கௌரிவிரதம், கந்தசஷ்டி போன்ற விசேட தினங்களில் விரதங்கள் மற்றும் நேர்த்திக் கடன்களுக்காக கோவிலுக்கு வரும் ஈழத்தைச் சேர்ந்த திருமணடமான 35 வயதுக்கு மேற்பட்ட குடும்பப் பெண்களே குறித்த பூசுகரின் அந்தரங்க லீலைகளுக்கு பலியாகி வருகின்றனராம். கடன் தொல்லைகள், குடும்பப் பிரச்சனைகள் போன்றவற்குக்கு தீர்வு இருப்பதாகக் கூறி அதற்கு தீர்வு என்ன என்பதற்காக குறித்த பூசகரிம் சாத்திரம் கேட்கச் செல்லும் பெண்களை குறித்த பூசகர் பரிகாரம் என்ற போர்வையில் தனது இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை வசியப்படுத்தி அந்தரங்க உறவுகளை பேணி வருகின்றார் என்றும் இது தொடா்பாக பெண்களின் கணவர் மற்றும் பிள்ளைகள், உறவுகள் அவதானமாக இருக்குமாறும் குறித்த கோவில் உதவியாளர் சில ஆதாரங்களுடன் எமது வம்பன் இணையத் தளத்திற்கு தகவல்களைத் தந்துள்ளார். இது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த அந்த பூசகருடன் நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குரல்பதிவையும் எடுத்து வைத்துள்ளோம். இந்தச் செய்தியில் நாம் கோவில் இருக்கும் பகுதியையோ கோவிலையோ குறித்துக் காட்டாது விட்டிருப்பினும் இந்தச் செய்தி தொடர்பாக குறித்த கோவில் நிர்வாகத்திற்கும் தகவல்கள் அனுப்பியுள்ளோம். எனவே குறித்த பூசகர் திருந்தாவிடில் நாம் அனைத்து ஆதாரங்களையும் பிரசுரிப்போம் .

