புதினங்களின் சங்கமம்

Facebook நிறுவனத்தின் புதிய பெயர் Meta!

பேஸ்புக்(Facebook) நிறுவனம் தனது பெயரை மெட்டா (Meta) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

Meta வின் பிரதான அம்சங்களில் ஒன்றாக முப்பரிமாணம் விளங்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. சமூகத் தொடர்பில் அடுத்த அத்தியாயம் இது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள Facebook, Instagram, Messenger, WhatsApp செயலிகள் முன்னர் உள்ளது போலவே அதே பெயர்களிலேயே செயற்படும் என்றும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.