முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 வயது கவிசாந் பலி!
புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் பரந்தன் வீதியில் தரித்து நின்ற ; வாகனத்துடன் உந்துருளியில் பயணித் இளைஞன் மோதி உயிரிழந்த சம்பவம் நேற்று 28.10.21 இரவு இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரவு 845 மணிக்கு தடைப்பட்ட மின்சாரம் இரவு 11.00 மணியளவில் வந்துள்ளது நகரம் இருளில் சூழ்ந்துள்ளவேளை மழையும் பெய்துகொண்டிருந்த நேரம் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வீதி ஓரத்தில் தரித்து நின்ற பாதுகாப்பு தரப்பினரின் வாகனத்துடன் அதிவிலை உயர்ந்த உந்துருளயில் வேகமாக பயணம் செய்த இளைஞன் வாகனத்தின் பின்பக்கத்தில் மோதி நடுவீதியில் தூக்கிவீசப்பட்டுள்ளன.
தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டு சென்றபோது அங்கு உயிரிழந்துள்ளான்.
புதுக்குடியிப்பு வேணாவில் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 21 அகவையுடைய மாரிமுத்து கவிசாந் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் விசாரணைகளின் பின்னர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் இரவு நேரங்களில் பயணம் செய்பவர்கள் மிகவும் அவதானமாக தங்ககள் பயணத்தினை மேற்கொள்ளுங்கள் கால்நடைகள் வீதிகளில் காணப்படுகின்றன. விபத்துக்ககள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
இதனை விட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அதிக விலைகொடுத்து உந்துருளிகளை வாங்கிக்கொடுப்பதும் இளைஞர்களின் பொறுப்பற்ற உந்துருளி செலுத்துதலாலும் இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

