யாழில் வயதுக்கு வந்த சின்ன வயதான இலக்கியா தவறான முடிவு எடுத்து மரணமானது ஏன்??
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பகுதியில் வசித்துவந்த சிறுமி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இந்த சம்பவம் நேற்று (27) மதியம் 1.30 மணியளவில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஊரெழு பகுதியைச் சேர்ந்த கமல்ராஜ் இலக்கியா என்ற 14 வயதுச்சிறுமியே இவ்வாறு தவறான முடிவினால் இந்த மண்ணை விட்டு பிரிந்துள்ளார்.
இது தொடர்பாகக் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சடலம் பிரோத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் இறுதி நிகழ்வு இன்று 28.10.21 நடைபெற்றுள்ளது ஊரெழு கிராமத்தினையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாழவேண்டிய சிறுவர்களின் இவ்வாறான முடிவுகள் வடக்கில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களை சரியாக கண்காணிக்கவேண்டும் சிறு பிரச்சினைக்கும் இவ்வாறான முடிவு சரியான முடிவல்ல என்பதை இதனை வாசிப்பவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.

