வவுனாயாவில் இலையான் கொத்துரொட்டி போட்ட சாப்பாட்டுக்கடை!! நடந்தது என்ன?
வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே காணப்படும் பிரபல சைவ உணவகத்தில்
வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட உணவில் இலையான் காணப்பட்டதினையடுத்து பொது சுகாதார
பரிசோதகர்களினால் குறித்த வர்த்தக நிலையத்திற்கு நீதிமன்றத்தில் எதிராக வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தில் இன்று மதியம் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் இடியப்பகொத்து
கோரியுள்ளார். இதன் பொது வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட இடியப்பகொத்தினுள் இலையான்
காணப்பட்டுள்ளது. அதனையடுத்து வாடிக்கையாளர் குறித்த உணவை பரிமாறிய ஊழியரிடம்
இவ்விடத்தினை தெரிவித்துள்ளார்.
இதன் போது அவ் உணவை மீள பெற்றுக்கொண்ட உணவகத்தின் ஊழியர் இலையானை வெளியேற்றி விட்டு
மீண்டும் அதே உணவை வாடிக்கையாளருக்கு வழங்கியுள்ளார். ஊழியரின் செயற்பாட்டினை அவதானித்த
வாடிக்கையாளர் வவுனியா சுகாதார திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த உணவகத்திற்கு விரைந்த பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இவ்விடயம்
தொடர்பாக ஆராய்ந்ததுடன் உணவகத்தினை பரிசோதனை மேற்கொண்டனர். இதன் போது அவ் உணவத்தில்
சுகாதார சீர்கேடும் நிலவுவதாக தெரிவித்து அவ் உணவத்திற்கு எதிராக பொது சுகாதார
பரிசோதர்களினால் நீதிமன்றத்தில் வழங்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த உணவகம் மீதான வழக்கு வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இம்மாதம் 29ம் திகதி
எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

