புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் ஹெரோயின் வைத்திருந்த 36 வயது பெண்ணுக்கு நடந்த கதி!!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 490 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பெண்ணினை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

முள்ளியவளை பொலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய போதைப்பொருளுடன் 36 அகவையுடைய குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளார்கள்.
சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது 16.04.2024 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.