புதினங்களின் சங்கமம்

யாழ் ஏழாலையில் பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட காவாலியை பொலிசார் தப்பி ஓடவிட்ட சம்பவம்!! 3 நாட்களுக்குள் திருப்பி பிடிப்பதாக உறுதி!!

யாழ்ப்பாபாணம் – ஏழாலை பகுதியில் தாக்குதல் நடத்த வந்தவரை மூன்று நாட்களுக்குள் கைது செய்வதாகவும் தமக்கு உரிய பாதுகாப்பை தருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் பாதிக்கப்பட்ட தரப்பினரும் பொலிஸாரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.

இதன் பின்னராக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பாதிக்கப்பட்டவர்கள் இதனை தெரிவித்தனர்.