புதினங்களின் சங்கமம்

வயலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு- மட்டக்களப்பில் சம்பவம்…. (Photo)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 38 ஆம் கிராமத்தில் உள்ள வாய்க்காலில் இருந்து சனிக்கிழமை (02) மாலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கண்டு பிடிக்கப்பட்ட சடலம் 38ம் கிராமத்தின் 3ம் வட்டாரத்தில் வசிக்கும் 47வயதுடைய 8 பிள்ளைகளின் தந்தையான அமரசிங்கம் சுந்தரலிங்கம் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை (01) மாலை வீட்டில் இருந்து வயலுக்கு போனவர் வீடு திரும்பாத நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
38ம் கிராமம் வைரவர் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள வயல் வடிகான் நீருக்குள் துவிச்சக்கரவண்டியும் சடலமும் கிடப்பதனை கண்ட அவ்வழியாக சென்ற ஆடு மேய்க்கின்றவர்களால் கிராம மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
May be an image of tree and body of water