புதினங்களின் சங்கமம்

ஒக்டோபர் -01 முதல் அனைத்து அரச, தனியார் ஊழியர்களையும் பணிக்கு அழைக்க அரசு முடிவு!

ஒக்டோபர் -01 முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்தி நாட்டை முழுமையாகத் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில், அன்று முதல் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களையும் முழுமையாக பணிக்கு அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் நேற்று நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின் பிரகாரம் ஒக்டோபர் -01 காலை 9 மணி முதல் அனைத்து அரச ஊழியர்களையும் முழுமையாகப் பணிக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அன்று காலை 10 மணி முதல் தனியார் துறை ஊழியர்களையும் பணிக்கு அழைக்க தீா்மானிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணிகளுக்கு சமூகமளிக்க ஏதுவாக சுகாதார விதிமுறைகளின்படி ரயில் மற்றும் பேருந்து சேவைகளை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.