புதினங்களின் சங்கமம்

பொலிஸ் காவலிலிருந்து தப்ப முயற்சித்த வலஸ் கட்டா!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல் பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பின் நெருங்கிய சகாவான வலஸ் கட்டா எனப்படும் திரின சம்பத் சப்புஆராச்சி,பொலிஸ் காவலிலிருந்து தப்பிக்க முயன்றதாக மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபருக்கு ஓர் அதிகாரி மருந்து கொடுக்கவிருந்தபோது, அந்த அதிகாரியைத் தள்ளிவிட்டு, அறையின் ஜன்னல் ஊடாக வெளியே குதித்து தப்பிக்க முயன்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் தற்போது பலத்த பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.