புதினங்களின் சங்கமம்

தொண்டமானாறு கடல் நீரேரியில் முதியர் சடலமாக மீட்பு!

தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காலை மீன் பிடிக்க சென்றவர்கள் சடலம் மிதப்பது தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியிருந்தனர்.

இதனடிப்படையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் போது நீரில் மூழ்கிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 80 வயது மதிக்கத்தக்க முதியவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆலயத்துக்கு வந்த முதியவர் நீரேரியில் குளிக்க முற்பட்ட சமயம் நீரில் மூழ்கி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.