புதினங்களின் சங்கமம்

பளை ஏ9 வீதியில் ஆட்டோவால் ஏற்பட்ட பயங்கர விபத்து!! ஆட்டோச்சாரதி படுகாயங்களுடன் தப்பி ஓட்டம்!! (Photos)

இன்று (18) மாலை கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் பாரியவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய ரக பேருந்தும் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

முச்சக்கர வண்டி தனது வேக கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியுள்ளது.

விபத்தின் போது முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்து முச்சக்கர வண்டி சாரதி பலத்த காயங்களுக்குள்ளானதுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

May be an image of one or more people, people standing and roadMay be an image of one or more people, people standing, motorcycle, tree and roadMay be an image of 2 people, people standing, motorcycle, tree and road