Home புதினங்களின் சங்கமம் 4 வயதான ஈழத் தமிச் சிறுமியான ஈஷா நடேஸ்வரனின் புற்றுநோய்க்கான சிகிச்சை லண்டனில் ஆரம்பம்!! உதவியவர்கள்...

4 வயதான ஈழத் தமிச் சிறுமியான ஈஷா நடேஸ்வரனின் புற்றுநோய்க்கான சிகிச்சை லண்டனில் ஆரம்பம்!! உதவியவர்கள் யார்? (Photos)

சில வாரமே உயிர் வாழ முடியும் என்று காலக்கெடு விதிக்கப்பட்ட ஈழத் தமிழ்ச் சிறுமிக்கு விரைவாக சிகிச்சைகளை மேற்கொள்ள வைத்தியசாலை நிர்வாகம் முடிவு.
ஈஷா நடேஸ்வரன் என்ற ஈழத் தமிழ் சிறுமிக்கு உதவுமாறு பல உறவுகள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக ஸ்டெம் செல்கள் கிடைத்தது. இதனையடுத்து விரைவாக சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லண்டன் காங்ஸ் ஹில் பகுதியில் வசித்துவரும் நடேஸ்வரன் ஈஷா என்ற 4 வயதான சிறுமி கடந்த மே மாதம் 13ம் திகதி, காலில் சிறு வீக்கம் காரணமாக பெற்றோர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சிறுமிக்கு. பொருத்தமான ஸ்டெம் செல்களை கண்டு பிடித்து அவரச சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்றும் மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சிறுமி ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டதால் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரின் ஸ்டெம் செல்களே அவருக்கு 100 விகிதம் பொருந்தும் என்றும் மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் சோகத்தில் மூழ்கினர்.

இதனையடுத்து பல புலம்பெயர் தமிழ் உறவுகள் குறித்த சிறுமிக்கு உதவுமாறு சமூக வலைத்தளத்தினூடாக வேண்டுகோளினை முன்வைத்து பகிரத் தொடங்கினர். இந்த முயற்சி வெற்றியளித்துள்ளது.

கடந்த 15 வாரங்களாக சிறுமி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில். தற்போது அவருக்கு சரியாக பொருந்தக் கூடிய ஸ்டெம் செல்கள் கிடைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே விரைவில் குறித்த சிறுமிக்கு சிகிச்சையை ஆரம்பிக்கவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று பல புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட முயற்சியும் சமூக வலைத்தளங்களை உயிர் காக்கும் முயற்சிக்கு பயன்படுத்தியதும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

குறித்த சிறுமி விரைவில் பூரண நலன்பெற்று பல்லாண்டுகள் சிறப்புடன் வாழ வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாகவும் உள்ளது.

May be an image of child, standing and indoor