யாழ் மாவட்டபுரம் பொலிஸ் நிலையத்தின் முன் இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை!! அப்பகுதியில் பதற்றம்!! திகைக்க வைக்கும் கொலைப் பின்னணி!
யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று மாலை மாவிட்டபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்த வீதியோரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் அடி காயங்களுடன் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது மோட்டார் சைக்கிள் ஒன்றும் 03 சோடி செருப்புக்களும் காணப்பட்டிருக்கின்றன. மோட்டார் சைக்கிளுக்கு அருகில் காணப்பட்ட சடலம் நோயாளர் காவு வண்டி ஊடாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தெல்லிப்பழை, நல்லிணக்கபுர்தினைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான மதியாபரணம் ஜெனூசன் (வயது 22) என்று தெரியவந்துள்ளது
மல்லாகம் பகுதியில் நடைபெற்ற மரணச் சடங்கு ஒன்றுக்குச் சென்றிருந்தவரே அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மோதல் எவ்வாறு இடம்பெற்றது போன்ற விரிவான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் வீதியில் வீழ்ந்து கிடந்தவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 24 வயதான ம.ஜெனுசன் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரது மோட்டார் சைக்கிள் வீதியில் தரித்து நின்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இன்று மதியம் மரண வீடொன்றில் கலந்துகொண்ட போது அங்கு சிலருடன் முரண்பாடு ஏற்பட்டதாகவும் அவர்களே கொலை செய்துள்ளனர் என குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
குறித்த மரணச்சடங்கு இடம்பெற்ற வீட்டில் வழமையாகவே கசிப்பு விற்பனை இடம்பெற்று வருவதாகவும் மரண வீட்டில் கலந்துகொண்டவர்களுக்கு தாராளமாக கசிப்பு வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரும் மரண வீட்டில் கலந்துகொண்டு கசிப்பு அருந்தியுள்ளார்.
அங்கு வந்த உயிரிவந்தவரின் நண்பரும் கசிப்பு அருந்திய நிலையில் இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கசிப்பு அருந்த தன்னையும் அழைத்துவரவில்லை என்று கூறியே இருவருக்கிடையிலும் முரண்பாடு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து முரண்பட்டவர்களை அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
உயிரிழந்தவரின் நன்பரே பிரதான சந்தேகநபர் எனவும் இருவரும் நண்பர்கள் எனவும் இருவரும் முன்னரும் முரண்படுவதும் பின்னர் சேர்ந்து திரிவதுமாக இருந்துள்ளனர். பிரதான சந்தேக நபரைப்போலவே உயிரிழந்தவரும் குழப்படியானவர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த கொலையை தனி ஒருவர் செய்திருக்க முடியாது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் சரணடைந்துள்ளதாகவும் எனினும் தான் கொலை செய்யவில்லை பொலிஸார் தேடியதால் சரணடைந்ததாக தெரிவித்துள்ளார். எனினும் பிரதான சந்தேகநபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை மற்றும் ஆரம்ப விசாரணைகளின் பின்னரே குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.