Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழ் வேம்படி மகளீர் கல்லூரியில் படித்த சுகன்யாவை லவ் பண்ணிய யாழ் இந்து மாணவன் சுகுமார்!! சுந்தரத்தாரின் மினிவானுக்குள்ளேயும் சயன்ஸ்கோலிலும் நடந்த விளையாட்டு என்ன??

சுந்தரத்தார் பஸ்சும், யாழ்ப்பாணத்து சுகன்யாவோட லவ்சும்!!
உண்மைச் சம்பவம்!!
அவள் ஆவரங்கால் சந்தியில் ஏறுவாள், பார்ப்பதற்கு அந்தக் கால யாழ்ப்பாணத்து தேவயானி போல் – ஸ்ரீதேவி போல் இருப்பாள், சந்தனத்து மேனிக்காரி, சைட் அடிக்க பலரை கியூவில் விட்டு விட்டு நெளியும் நாணக் காரி. அவள் சைக்கிள் ஓடும் விதமே தனி, அவள் பின்னே காவலுக்கு என்று டியூசன் முடிந்ததும் செல்லும் காளையர் கூட்டமோ பல.
வர்ணிக்க வார்த்தை தேடீன், அவள் அந் நாள் காதலன் சுகுமார் பேஸ்புக்கில் இருப்பதால் இன்பொக்ஸை அர்ச்சனைகளால் நிரப்புவான் என்பதனால் இலேசாக நகர்கிறேன்.
மஞ்சள் டை கட்டியிருப்பாள், வேம்படியில் படித்தாள், சனி ஞாயிறு என்றால் போதும், கரெக்டா 07 மணிக்கு ஆவரங்கால் சிவன் கோவிலடிச் சந்தியில் நிற்பாள், அவள் சயன்ஸ் ஹோலில் Bio படிக்கப் போனாள்,
சுகுமார் நீர்வேலியில் ஏறுவான். யாழ் இந்துவின் மாணவன். அவன் அதே சயன்ஸ்ஹோலில் கணித பாட வகுப்புக்களிற்காக வீக்கெண்டில் போவான்.
இருவரும் கண்களால் மோதிக் கொள்ளும் இடம் சுபத்திரன் மாஸ்டரின் Chemist க்ளாஸ். அதில் முன் வரிசையில் இடம் பிடிக்க வேண்டி அருகே உள்ள யாழ் ஓட்டலில் மிதிவெடியும், கொக்க கோலாவும் வாங்கி அவன் வகுப்பு நண்பர்களிற்கு இலவசமாய் சுகுமார் அர்ப்பணிப்பான்.
அவ்வப்போது வகுப்புக்கள் இல்லையெனில் பெருமாள் கோவிலில் கண்களால் சந்தித்துக் கொள்வார்கள். பேச்சேதும் இல்லை.
கரெக்டா இருவரும் சுந்தரத்தார் பஸ்ஸில் ஒவ்வோர் வார இறுதி வகுப்பிற்காகவும் காலையில் நேரம் தவறாது ஏறுவார்கள். அவள் இடப் புறம் பஸ்ஸின் நடுப் பகுதியில் நிற்பாள், அவன் மிதி பலகையில் நிற்பான்.
சுந்தரத்தார் பஸ்ஸில் பாட்டிற்கு பஞ்சமிருக்காது.
அதுவும் 90களின் தெவிட்டாத காதல் மெட்டுக்கள் பருத்தித்துறை – யாழ் வீதியில் உள்ள பச்சைப் பசேலென்ற விவசாய நிலங்களை தாண்டி பஸ் செல்லுகையில், செம்புழுதி வந்து ஒட்டிக் கொள்ளும் போது, காதில் சிட்டுவேசன் பாடல்களாய் வந்து ஒலிக்கும்.
செம்பருத்திப் பூவே , ரோசாப்பு சின்ன ரோசாப்பு, போவோமா ஊர் கோலம் பாடித் தேயாத பாட்டுப் பெட்டி யாழ்ப்பாணத்து பஸ்ஸில் இல்லையென்பேன் யான்.
”திருவிழா போல காதல்தான் அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில் நம்மை தேடும் செய்தி தருவோமா’ என்ற வரி வர அவன் அவளை நோக்குவான், அவள் அவனைப் பார்ப்பான், இருவரும் ஒரு புன்னகையை வீசிச் சிரிப்பார்கள்.
பஸ் இப்போது கோப்பாய் வெளி தாண்டி இருபாலையை நோக்கி விரைகிறது,
அவன் கீழே இறங்கி , தரிப்பிடத்தில் நின்றவர்களை ஏற்றி விட்டு மீண்டும் ஏறுகிறான்,
கடலாக நீயும் மாறினால் அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால் அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்
அரிதாரம் பூசும் ஒரு வானவில்லை பரிசாக கேட்கிறாய்
உனை சேரத்தானே யுகம் தோறும் மண்ணில் அவதாரம் ஆகிறேன்
அது பொய் என்றபோதும் உன்னோடு பேசும் கனவுகள் வேண்டுகிறேன்
பாடும் நிலா பாடிக் கொண்டிருக்க, அவள் – அவன் மீண்டும் பார்வைகள்,
இப்படி சுந்தரத்தார் பஸ்ஸில் ஏராளம் பாடல்கள் காதல் ரசம் ததும்ப ஒலித்துக் கொண்டிருந்தது, சயன்ஸ்ஹோலும் முடிந்து அவள் டாக்டரானாள், அவன் பொறியியலாளர் ஆனான். அவர்கள் காதல் மீண்டும் அஃதே சுந்தரத்தார் பஸ்ஸில் இன்னோர் சுகன்யா – சுகுமாராக மீண்டும் துளிர்விட ஆரம்பிக்கிறது.
இறுதி வரை சொல்லாத காதலாகிப் போகிறது அவர்கள் காதல்!!
பெயர், விபரங்கள் மாற்றப்பட்டுள்ளது.