புதினங்களின் சங்கமம்

இலங்கையில் ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டது! ஹெகலிய ரம்புக்வெல என்ன சொல்கின்றார்??

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணிவரை ஊரடங்கு நீடிப்புத் தொடரும் என்று ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரட்னாயக்க அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை ஆபத்து இல்லாமல் நாட்டைத் திறக்கும் வகையிலேயே தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம் செப்டம்பா் 21 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட பின்னர் நாட்டில் தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் ஆபத்து இல்லாத வகையில் மீண்டும் திறக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் தனது ருவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

தயவு செய்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் பொது சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடியுங்கள். இந்தக் காலப்பகுதியை விரைவாகத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளப் பயன்படுத்துங்கள் எனவும் நாட்டு மக்களிடம் சுகாதார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.