பல்சுவை செய்திகள்

100ஆண்டுகளுக்கு முதல் நெடுந்தீவில் நடந்தது என்ன?

இன்று 101 வகை ?பறவைகளினதும் 15 வகை வண்ணாத்திப் பூச்சிகளினதும்? காட்டுக்குதிரைகளினதும்? வீடான
நெடுந்தீவு அன்று எப்படியிருந்தது?

“ஊர்காவற்றுறையிலிருந்து 16 மைல் தூரத்தில் அமைந்துள்ள நெடுந்தீவு 6 மைல் நீளமும், 3 மைல் அகலமும், அறவே தட்டையான முருகைக்கல் தரையும், வடக்கே பனந்தோப்புகளும், தேற்கே கற்கள் பரந்து பசும்புல் படர்ந்து பூவரச மரங்கள் அடர்ந்த வெளியும் கொண்டது.

அதன் பரப்பளவு 11,500 ஏக்கர் (18 சதுர மைல்). 2,500 ஏக்கரில் உலர் தானியப் பயிர்ச்செய்கை, 1,100 ஏக்கரில் பனைகள், 4,700 ஏக்கரில் புல்வெளி உண்டு. கிழக்கு குறிச்சி, நடுக்குறிச்சி, மேற்கு குறிச்சி என்னும் மூன்று குறிச்சிகள் இருக்கின்றன. மக்களிடம் 1,905 வத்தைகள் உள்ளன.

பிரதான ஏற்றுமதிகள்: பாய், சுறாமீன் சிறகு, புட்டியிலிட்ட நெய், பானை, பையிலிட்ட கொப்பரா, பினாட்டு, பனங்கொட்டை, தேங்காய், பருத்தி நூல், கணவாய் ஓடு, கால்நடை… நெடுந்தீவு நெய்க்கு யாழ்ப்பாணத்தில் மிகுந்த கிராக்கி உண்டு. போர்த்துக்கேயர் இங்கு வைத்து குதிரையினத்தைப் பெருக்கியதால், இது குதிரைத் தீவு எனவும் பெயர்பெற்றது. அவர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் குதிரையினப் பெருக்கத்தில் ஈடுபட்டனர். குதிரையினப் பெருக்கம் பின்னர் கைவிடப்பட்டது. சாராப்பிட்டியில் இன்றும் குதிரைத் தொழுவங்களின் சிதைவுகள் காணப்படுகின்றன
-J. P. Lewis, Ceylon Civil Service.
#படம்: நெடுந்தீவு இன்று