இலங்கையில் பெண்கள் இயலுமானால் கற்பமடைவதை ஒரு வருடத்துக்கு தள்ளிப்போடுமாறு பெண் நோயியல் மருத்துவ நிபுணர் ஹர்ஷா அத்தப்பத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவா் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது நாட்டில் வேகமாகப் பரவிவரும் டெல்டா உரு திரிபு வைரஸ் கற்பவதித் தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கும் ஆபத்தானது எனவும் அவா் குறிப்பிட்டார்.
எனவே, சாத்தியமானால் கர்ப்பமடைவதை 1 வருடம் தள்ளிப்போடுவது சிறந்தது எனவும் மருத்துவ நிபுணர் மருத்துவர் ஹர்ஷா அத்தப்பத்து தெரிவித்தார்.





