புலம்பெயர் தமிழர்

சிறிலங்கா சென்ற சுவிஸ் தமிழர் பலருக்கு டெல்டா தொற்று! அரசு விடுத்த அறிவிப்பு! சிறிலங்கா சென்ற சுவிஸ் தமிழர் பலருக்கு டெல்டா தொற்று! சுவிஸ் அரசு விடுத்த அறிவிப்பு!

சுவிட்சர்லாந்துக்கு வருவோருக்கு மீண்டும் பயணக்கட்டுபாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிஸ் குடிமக்கள் பலர் கோடை விடுமுறைக்கு வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பியதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று அதிகரித்தவண்ணம் உள்ளது

குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான Kosovo என்ற நாடு முற்றிலுமாக அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கிக்கொண்டதையடுத்து, ஐரோப்பியர்கள் அந்த நாட்டுக்கு பெருமளவில் சுற்றுலா செல்கின்றனர்.

 

அப்படி Kosovoவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய ஒருவர் கூறும்போது, அங்குள்ள Pristina என்ற விமான நிலையத்தில் போலி கொரோனா சோதனை முடிவுகளை எளிதாக வாங்க முடிவதாக கூற, அந்த விடயம் அதிகாரிகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

அதாவது Kosovoவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, அங்கிருந்து சுவிட்சர்லாந்து திரும்பும்போது போலியாக தங்களுக்கு கொரோனா இல்லை என சான்றிதழ் பெற்றுக்கொண்டு நாடு திரும்புவது எளிது என்பதால், நாட்டுக்குள் வரும் மக்கள் கொரோனா இருந்தாலும் போலியான ஆதாரங்களைக் காட்டி நாட்டுக்குள் நுழைந்துவிடலாம் என்பதால், அவர்கள் மூலம் நாட்டில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

அதற்கேற்றாற்போல், தற்போது சுவிஸ் குடிமக்கள் சுற்றுலா முடிந்து நாடு திரும்பத் தொடங்கியதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டுள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தென் கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு சென்று திரும்பியவர்கள் என பெடரல் கொரோனா கட்டுப்பாடு அமைப்பும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஆகவே, வரும் இலையுதிர்காலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக, வெளிநாடு சென்று திரும்புவோருக்கு மீண்டும் தனிமைப்படுத்தலை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர் Alain Berset தெரிவித்துள்ளார்.

சுவிஸ் தமிழர்களும் இலங்ஙை சென்று டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று அவசர அவசரமாக சுவிஸ் திரும்பி வருகின்றனர்,மேலும் பலர் எப்படி வருவது என்று தெரியாமலும் உள்ளனர்.இவர்கள் அனைவருமே இரண்டு டோஸ் போட்டு கொண்டவர்களே…இருப்பினும் டெல்டா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.