மாதவிடாய் தொர்பாக பெண்கள் கதைப்பது என்ன?? முகநூல் நண்பிகளுக்கும் மட்டுமான Abi Thushy பதிவு இது!!
Abi Thushy என்பவரது பேஸ்புக் பதிவு இது
“முகநூல் நண்பிகளுக்கும்
மட்டுமான பதிவு “
48 வயதை கடந்த சில நண்பிகள் தொலைபேசியில் பேசும் போது,
periods ( மாதவிடாய்) பற்றி சாதாரணமாக பேச்சுவாக்கில் குறைநிறைகளை சொல்வார்கள்.
“நானும் சொன்னன் மகப்பேற்று மருத்துவரை போய் பாருங்களன், சும்மா வைச்சு அனுபவிச்சு துன்பப்படாம Menopause க்கு உரிய symptoms போல தெரியுதே?”
(Irregular periods.
Hot flushes. …
Night sweats. …
Water and gas bloating. …
Digestive problems. …
Mood swings.)
என்றதும் உடனே பாஞ்சு அடிச்சு “இல்ல இல்ல அப்பிடி ஒண்டுமே இல்ல.
இது கொரோனாவுக்காக அடிக்கடி பெருங்காயம் , இஞ்சி உள்ளி சாப்பிட்டதாலதான் இந்த முறை early யா வந்திட்டு” அது இது என மறுத்து பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போவார்கள்???
⭐️ ஏன் மெனபோஸ் என்றால் பதறி மறுக்கிறார்கள் பெண்கள்?
⭐️ குறிப்பாக unmarried 3 ladies ஒரே (போல react பண்ணினார்கள்?
இனிமேல் திருமணம் முடிக்கும் எண்ணம் சுத்தமாக இல்லை 48, 49 வயது )
⭐️ அந்த அந்த வயதில் அது அது நடந்தால் தானே இயற்கை ?
⭐️⭐️⭐️ மனரீதியாக பெரியதோர் தாக்கம் ஏன் ஏற்படுகிறது?
தாங்கள் பெண்மையை இழந்துவிடுவதாக எண்ணுகிறார்களா?
அல்லது வயது போய்விட்டது என அதை ஏற்க மறிக்கிறார்களா?
( இன்று ஒரு நண்பியிடம் இன்னுமொரு பெண் என்ன இத்தனை நாளா தொடந்து போகிது, நிக்கபோகிதோ என கேட்டு விட்டாவாம், வானத்துற்கும் பூமிக்கும் குதித்து கத்து கத்து என கத்தினார் என்னிடம் சொல்லி சொல்லி
“இவ எப்பிடி சொல்லலாம் இப்பிடி நான் போன கிழமை முழுக்க rest இல்லாமல் வேலை அதுதான் எனக்கு தொடந்து 15 நாளா போகிது அதுக்கு இவ இப்பிடி சொல்லலாமோ” திகைத்து போய் கேட்டுக்கொண்டு இருந்தேன்)
⭐️ எதற்கு இவ்வளவு கோவம்? ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? இறுதியில் உண்மையாக மெனபோஸ் வரத்தானே போகிறது ? அன்று ஏற்று கொண்டு ஆகவேண்டி வரத்தானே போகிறது ?
⭐️ மனதை தயார்படுத்துவது தானே சரி?
பூமாதேவிக்கு உவமையான நாம் பக்குவப்பட வேண்டும் அல்லவா ?
நாம் இயற்கையை ஏற்றுக்கொண்டு தானே ஆகவேண்டும் ?

