பிரித்தானியாவில் தமிழ்க் கடைக்காரர் செய்த அலங்கோலம். பிரதேச வாசிகள் கூழ் முட்டை வீசி தாக்குதல்..! பரபரப்பு வீடியோ இதோ….
பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் கடை வைத்திருக்கும் இலங்கைத் தமிழர் ஒருவர் லொக்டவுனில் வாடிக்கையாளர் ஒருவருக்கு செய்த அநியாயத்தின் காரணமாக சூழ்ந்த அப் பகுதி பிரதேச வாசிகள் விற்பனைக்கு இருந்த கூழ் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தனது பிள்ளைகள் வேறு இடத்தில் வசிப்பதால் லோக்டௌன் நேரத்தில் உடல் இயலாத ஒரு மூதாட்டி உணவு பிரச்சினையை எதிர்கொண்டார்.
தூர இடத்தில் வசிக்கும் பிள்ளைகள் வந்துதான் அந்த தாய்க்கு ஒரு கிழமைக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கிகொடுத்துவிட்டு செல்வது வழக்கம். லொக்டவுன் என்பதால் அவர்களால் தனது தாய்க்கு வேண்டிய உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் எழுந்து நடக்க முடியாத அந்த மூதாட்டி தனது வீல் செயாரின் உதவியுடன் அருகிலிருந்த குறித்த தமிழ்க் கடைக்காரரின் கடைக்குச் சென்று முட்டை, பீன்ஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை தனது வண்டியின் உதவியுடன் கொளவனவு செய்துள்ளார்.
ஆனால் அந்த கடைக்காரர் செய்த அநியாயத்தை பாருங்கள்..
வாங்கிய ஒவ்வொரு பொருளுக்கும் இரட்டிப்பாக பணம் அறவிட்டதுடன் அந்த மூதாட்டி வாங்கிய நல்ல முட்டையை மறைத்து கவுண்டரில் வைத்திருந்த கூழ் முட்டையை மாற்றிக் கொடுத்துள்ளார். மனிதாபிமானமற்ற இந்த ஈனச் செயலைச் செய்த தமிழ் கடைக்காரருக்கு எதிராக திரண்ட அப் பகுதி பிரதேச வாசிகளும் மூதாட்டியின் உறவினர்களும் அவரது கடையில் இன்னமும் விற்பனைக்கு வைத்திருந்த கூழ் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
விடியோவை பாருங்கள் அவர் அந்த மூதாட்டியின் பிள்ளைகளிடம் தெனாவெட்டாக பேசுவதையும் கூழ் முட்டை அவரது கையில் வடிந்து ஒழுகுவதையும், அவரது பெட்டிக் கடையில் விற்பனைக்கு தயாராகவுள்ள காலாவதியான ஒரு தொகுதி பொருட்களையும் காணக்கூடியதாக உள்ளது.
உலகம் பூராகவும் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் பல தமிழ் வர்த்தகர்கள் தங்களிடம் இருந்த பொருள்களை இலவசமாக கொடுத்தும் உணவளித்தும் வரும் நிலையில் “எரியும் வீட்டில் பிடுங்கினது மிச்சம்” என்பது போல் பகல் கொள்ளையில் ஈடுபடும் இப்படியான ஈனத்தனமான கயவர்களும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

