புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

CANADA ரொறன்ரோவில் சூட்கேஸுக்குள் சடலமாக மீட்கப்பட்ட வர்ஜா!!

ரொறன்ரோ நகரின் சில்வர்தோர்ன் பகுதியில் கடந்த 25ம் திகதி சூட்கேஸுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

சில்வர்தோர்ன் பகுதியில் சூட்கேஸுக்குள் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பகல் 11.30 மணியளவில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டதுடன், உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் 41 வயதான Caledon பெண்மணி எனவும் இந்தியரான அவரது பெயர் Varsha Gajula எனவும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். ரொறன்ரோவில் இந்த ஆண்டு கொல்லப்படும் 50வது நபர் Varsha Gajula என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள