வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட இரு யாழ்ப்பாண பெண்கள் கட்டுநாயக்காவில் கைது!!

வெளிநாடு செல்ல முயற்சித்த இரண்டு பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
போலியான பதிவு முத்திரைகளை பயன்படுத்தி இவர்கள் வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யும் போது வெளிநாட்டு வேலைக்காக செல்லும் இரு பெண்களின் கடவுச்சீட்டில் ஒட்டப்பட்ட பாதுகாப்பு முத்திரை பொய்யாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் இவ்வாறு ஓமன் நாட்டுக்கு செல்ல முயற்சித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
error

Enjoy this blog? Please spread the word :)