புதினங்களின் சங்கமம்

யாழ் அச்சுவேலி மினிபஸ் காவாலியின் அட்டகாசம்

மக்களின் பொதுப்போக்குவரத்து சேவையான தனியார் மற்றும் அரச பஸ்களின் அட்டகாசம் யாழப்பாணத்தில் அதிகரித்துள்ளது. சில ரூபாய்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு வீதியில் மக்களின் உயிரினை கவனத்தில்கொள்ளாது மின்னல்வேகத்தில் போக்குவரத்து விதிகளை மீறி ஓட்டிச்செல்வது குடாநாட்டில் சர்வசாதாரணமாகிவிட்டது..இவர்களுக்கு நேரக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளமையால் புறப்படும் நேரத்தில் பயணிகள் பலரை ஏற்றுவதற்காக ஆமைவேகத்தில் ஊர்ந்துசெல்வதும் பின்னர் கடைசிநேரத்தில் நேரம் நெருங்கிவரும்போது வீதிவிதிகளையும் ,மக்களையும் பாராது  மின்னல்வேகத்தில் பறப்பதும் யாழில் அன்றாடம் நடைபெகிறது.இதனால்சந்திகளிலுள்ள சமிக்கை விளக்குகளைக்சகூட கவனிக்காமல் பறக்கிறார்கள்.

      நேற்றுக் (11) காலை 10.15 மணியளவில் அச்சுவேலியிலிருந்து யாழ்நகர்நோக்கி பயணித்த 60-4819 இலக்க மினிபஸ்ஸினுடைய சாரதி வேம்படிச்சந்தி சமிக்கையின் நேரம் முடிந்தபின்பும் ஏனையவர்களை அச்சுறுத்தும்வகையில் பிழையானமுறையில் வாகனத்த செலுத்தியதால் அங்கு பயணிகள் பீதியடைந்தனர் அவர் மதுபோதையில் செலுத்தியிருக்கலாம் என மக்கள் சந்தேகம் வெளியிட்டனர்.
      யாழ் மாவட்த்தில் நடக்கும் இவர்களுடைய அட்டகாசங்கள் விரிவான தகவல்களுடனும் வாகனத்தின் உள்ளிருந்தும் வௌிப்புறமாகவும் எடுக்கப்பட்ட காட்சிகளுடன் விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறோம்.