புதினங்களின் சங்கமம்

பேஸ்புக் பதிவால் சிலாபத்தில் ஏற்பட்ட மோதல்!! வெளியாகியது உண்மை!!

சிலாபத்தில் இன்று காலை ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு முஸ்லிம் வர்த்தகர்
ஒருவர் இட்ட முகநூல் பதிவே காரணமென தெரிவித்து பொலிஸார் அவரை கைது
செய்துள்ளனர்

ஆனால் அவர் இட்ட பதிவொன்றை தவறாக விளங்கிக் கொண்ட ஒரு குழுவே குழப்பம் விளைவித்துள்ளது.

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கெதிரான
செயற்பாடுகள் குறித்தான தனது விசனத்தை வெளியிட்ட ஹஸ்மார் ஹமீட் என்ற
வர்த்தகர் , அளவுக்கதிகமாக சிரித்தால் ஒரு நாள் அழ வேண்டியும் வரும் என்பதை

ஆனால் அதனை மொழிபெயர்த்த சிங்கள இளைஞர்கள் சிலர் , ” இன்று மட்டும் தான்
நீங்கள் சிரிப்பீர்கள் நீங்கள் அழ இன்னும் ஒரு நாள் இருக்கிறது ” என்று
பதிவிடப்பட்டதாக உணர்ந்து அதன் உண்மைத் தன்மையை கேட்கவே மேற்படி
வர்த்தகரின் கடைக்கும், பொலிஸுக்கும் சென்று தர்க்கத்தில்
ஈடுபட்டனர்.பின்னர் அந்த பிரச்சினை பூதாகரமானது .

ஏற்கனவே நாளை திங்கட்கிழமை ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கலாமென செய்திகள்
பரவியிருந்த நிலையில் இதனை அதனுடன் ஒப்பிட்டதால் இந்த களேபரம்
ஏற்பட்டுள்ளது.

எப்படியாயினும் தற்போது வர்த்தகரை கைது செய்துள்ள பொலிஸ் இந்த பதிவு தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகிறது.