ராகம வைத்தியசாலை வைத்த்தியர் கொரோனாவுக்கு பலி!
ராகம – வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
பேராதனை பல்கலைக் கழகத்தில் பட்டதாரியாகி, ராகம – வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணராக கடமையாற்றி வந்த மொஹமட் ஜனன் (வயது-41) என்ற வைத்தியரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 12 நாட்களாக ராகம – வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

