சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இரு பொலிசார் எதற்காக இடமாற்றப்பட்டனர்!!
சாவகச்சேரி காவற்துறை நிலையத்தை சேர்ந்த இரு காவற்துறை உத்தியோகஸ்தர்கள் கடமைகளை செய்ய தவறிய குற்றச்சாட்டில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தமது கடமைகளை உரிய முறையில் செய்ய தவறிய இரு காவற்துறை உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்த , நிர்வாக ரீதியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஏதுவாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் , இரு காவற்துறை உத்தியோகஸ்தர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எழுதுமட்டுவாழ் காவற்துறை சோதனை சாவடியில், கடந்த வாரம் இரு காவற்துறை உத்தியோகஸ்தர்கள் டிப்பர் சாரதிகளிடம் இலஞ்சம் பெற்றதாக யாழ் மாவட்ட சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் சூரிய பண்டாரவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அது தொடர்பிலான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.