பொலிசாரின் அவசர அறிவித்தல் இதோ!! அவதானம் மக்களே!!
அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை தமது உடமையில் வைத்திருப்பவர்களுக்கு அதனை பொலிஸாரிடம் ஒப்படைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதன்படி எதிர்வரும் 14ம் திகதி காலை 06 மணிக்கு முன்னதாக அவற்றை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசெகர கூறியுள்ளார்.