யாழ் பண்ணைப் பாலத்திற்கு அருகில் சென்றவர் பாலத்தின் அதி வேக கடல் நீரோட்டத்தில் அள்ளுண்டு சென்றார்!! தேடுதல் தொடர்கின்றது!!
யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்தில் செல்பி எடுக்க வந்தவர் என்று கருதப்படும் ஒருவர் பாலத்திலிருந்து தவறி வீழ்ந்த நிலையில் காணாமல் போயிருப்பதாக தெரியவந்துள்ளது.
சற்றுமுன்னர் பாலத்திலிருந்தவர் நிலை தடுமாறி நீரினுள் வீழ்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து அந்தப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்களும் மக்களுமாகச் சேர்ந்து அவரைத் தேடிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
15 நிமிட நேரமாகியும் அவரைக் காணவில்லை என்பதால் நீரோட்டத்துடன் அவர் இழுத்துச்செல்லப்பட்டிருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
நீரில் வீழ்ந்தவர் பற்றி அங்கிருப்பவர்களுக்கு தகவல் தெரியாது என்பதால் உறவினர்கள் யாராவது செய்தியைப் பார்த்தால் சம்பவ இடத்திற்குச் செல்லவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

