புதினங்களின் சங்கமம்

அனைத்து பாடசாலைகளையும் ஜனவரி வரை மூட நடவடிக்கை எடுக்கவும்: ஜனாதிபதிக்கு கடிதம்!

இலங்கையில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்துப் பாடசாலைகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் மேற்குறித்த கோரிக்கையினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் காணப்பட்டுவரும் கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.