புதினங்களின் சங்கமம்

பெண்ணைக் கொலை செய்து உரப்பையில் போட்டு கடையில் வைத்த இளைஞன்!! மட்டு“வில் பரபரப்பு!! (Photos)

வாழைச்சேனையில் – பெண் ஒருவரை கொலை செய்து உரப்பையில் எடுத்துச் சென்று கடை ஒன்றின் முன் வைத்துச் சென்ற இளைஞர் ஒருவர் கைது –
–மட்டு வாழைச்சேனையில் சம்பவம்–
(கனகராசா சரவணன்;)
மட்டக்களப்பு வாழைச்சேனையில் பெண் ஒருவரை கழுத்தை நொரித்து கொலை செய்து அவரை உரைப்பையில் வைத்து கட்டி மூட்டையாக சடலத்தை எடுத்துச் சென்று கடை ஒன்றின் முன்  வைத்துவிட்டு  சென்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று (5) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் 28 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை சித்தி லைலா சோர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்;ளார்
கைது செய்யப்பட்ட இளைஞர் கடை ஒன்றை நடாத்திவருவதாகவும் வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க வீதியில் வசித்துவரும் குறித்த பெண்ணுக்கும் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல்; பிரச்சனை இருந்துவந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு குறித்த இளைஞன் பெண்ணிடம் சென்று பணம் கேட்ட நிலையில் இடம்பெற்ற வாக்கு வாதத்தின் எதிரொலிகாக அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து உரைப்பையில் உயிரிழந்தவைரை மடக்கி உட்புகுத்தி மூட்டையாக எடுத்துச் சென்று
வாழைச்சேனை பொதுச் சந்தை பகுதியிலுள்ள நண்பன் ஒருவரின் கடைக்கு முன் மூட்டையை வைத்துவிட்டு ”இது இருக்கட்டும் வந்து எடுக்கின்றேன்”  என தெரிவித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.
May be an image of 1 person and standing
இதனையடுத்து குறித்த மூட்டையை வைத்துவிட்டு சென்ற நண்பன் நீண்ட நேரமாகியும் எடுக்க வரவில்லை என்ற நிலையில் மூட்டை அருகில் சென்ற போது ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து மூடையை திறந்தபோது அதில் சடலம் ஒன்று இருப்பதை கண்டுள்ளதையடுத்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்ட நிலையில் சடலத்தை மூட்டையாக கொண்டு சென்று வைத்துச் சென்ற 28 வயது இளைஞனை நள்ளிரவில் கைது செய்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
May be an image of 1 person