புதினங்களின் சங்கமம்

பள்ளிவாசலுக்குள் பொலிசார் நுழைய எதிர்ப்பு!! பொலிஸ் எச்சரிக்கை!! தலை தெறிக்க ஓடிய முஸ்லீம்கள்!

கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள பள்ளிவாசலில் பெருந்தொகை ஆயுதங்கள் நேற்றையதினம் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டது.

கெத்தாராம பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் துப்பாக்கி, வாள்கள், சீடிகள் என பொலிஸார் மீட்டிருந்தனர்.

சோதனை நடவடிக்கைக்காக சென்ற பொலிஸாரை பள்ளிவாசலுக்குள் செல்ல அங்கிருந்த கும்பல் ஒன்று மறுப்பு தெரிவித்தது. பள்ளிவாசலுக்குள் செல்ல வேண்டாம் என மறுப்பு தெரிவித்தனர்.

பள்ளிவாசலில் என்ன இருந்தாலும் பரவாயில்லை வெளியே காண்பிக்க கூடாது. நாங்கள் அதற்கு எதிரானவர்கள். அத்துடன் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதிக்கவே மாடோம் என அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர்.

எனினும் அங்கு வந்த OICயின் கடுமையான எச்சரிக்கையை அடுத்து, அந்தக் கும்பல் தலைதெறிக்க ஓடியுள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.