புதினங்களின் சங்கமம்

கொழும்பின் பிரபல மென்பொருள் நிறுவன பொறியியலாளர் புலனாய்வாளர்களால் கைது!

கொழும்பின் பிரபல கணனி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என புலனாய்வு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தாக்குதல்தாரிகள் App எனப்படும் செயலி ஒன்றை பயன்படுத்தினார்களா? என்பது பற்றி சி ஐ டியினர் ஆராய்ந்து வருகின்றனர்.

அதன் காரணமாகவே மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சந்தேகத்தின் பேரில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அதேபோல் அதே நிறுவனத்தில் பணிபுரியும் 5 பேரிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகவே இந்தக் கைதும் விசாரணைகளும் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.