ஜேர்மனியில்..கடும் மழை வெள்ளம்!.. 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை.. 3 மணித்தியாலங்களில் கொட்டித்தீர்த்தது..(Video)

ஜேர்மனியில் கொட்டித்தீர்த்த மழை…90 பேர்வரை பலி 100 பேர் மாயம்: வீடுகளின் கூரைகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள் ஜேர்மனியில் மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை மூன்றே மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததில்¸ 90 பேர்வரை பலியாகியுள்ளதுடன் 100 பேர்வரை காணாமல் போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
சாலைகள் வெள்ளக்காடாக¸ சில இடங்களில் சாலைகளும்¸ சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும்¸ வாகனங்களும்¸ சில இடங்களில் வீடுகளும்¸ உடமைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வெள்ளம் சுழ்ந்த வீடுகளின் கூரைகளில் 50 பேர் வரை மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியின் 16 மாநிலங்களில் ( (NRW) Northrhein Westfalin, Rheinland- pfalz நோத்றைன் வெஸ்பாளின் மாநிலம்தான் சனத்தொகை கூடிய மாநிலமாகும். இந்த மாநிலத்திலும் றையின்லாண்ஸ் மாநிலத்திலும் மிக அதிகமான மழை கொட்டித்தீர்த்துள்ளது. எனைய மாநிலங்களிலும் கடும்மழை கொட்டியதால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சாலைகளில் நதி போல் வெள்ளம் ஓட¸ அப்பகுதி மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சில நகரங்கள்¸ கிராமங்களில் மக்களை மீட்கச் சென்ற தீயணைப்புவீரர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்க¸ மற்றொருவர் இன்னொரு பகுதியில் மீட்புப்பணியின்போது நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்துள்ளார். மழையில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அதில் 100 பேர் வரை காணாமல் போயிருக்கிறார்கள். மரணங்களும் காணாமல் போனோர் தொகையும் அதிகரிக்கும் எனத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மீட்புப்பணிகள்¸ நிவாரணப்பணிகள்¸ பாதுகாப்புப்பணிகள் அனைத்தையும் அரசாங்கத்தின் பணிப்பில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் அதிவேக வீதிகள்¸ வேக வீதிகள்¸ கிராமியவீதிகள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. பஸ்¸ பேரூந்து¸ தொடரூந்து சேவைகளும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. பல மாநிலங்களில் தற்போது பாடசாலைகள் கோடைகால விடு;முறையில் இருப்பதால் கல்விச் சேவைகள் பெரிதளவில் பாதிப்பு இல்லாவிடினும் சில பாடசாலைகள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
யேர்மனிய கான்சிலர் அங்கலா மார்க்கல் தற்போது அமெரிக்காவில் அரசதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதால் பதில் கான்சிலரும் மாகாணங்களின் முதலமைச்சர்களும் மத்திய¸ மாநில மந்திரிமாரும் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு நிவாரணப்பணிகளை மேற்கொண்டதுடன் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துவருகிறார்கள். பொதுமக்களும் அரச படையினரும் மீட்புப் பணிகளைச் செய்துவருவதுடன் நிவாரண உதவிகளையும் செய்து வருகிறார்கள்.
கொரோனா என்னும் கொடிய கிருமித்தாக்குதலால் நேற்றுவரை இந்த நாட்டில் 92.000 பேர்வரை இறந்திருக்கிறார்கள். இந்த அலையில் சிக்கித்தவிக்கையில் மேலும் இப்படி மழைவெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீள்கட்டமைப்புகளுக்குரிய பொருளாதாரம் இந்த நாட்டில் காணப்பட்டாலும் உயிரிழப்புகளை ஈடுசெய்ய முடியாதது உண்மையே.
இந்த அனர்த்தத்தால் உயிரிழப்புக்கள் இன்னும் அதிகரிக்கலாம். அரசுக்கும் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் கோடிக்கணக்கான பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றது. உடமைகள் வீடுகள்¸ வாகனங்கள்¸ கட்டிடங்கள் மழையோடு அடித்துச் செல்லப்பட்டிருப்பதால் பெரும் இழப்புக்களைச் சந்தித்துள்ளது இந்த நாடு. இழப்புக்களின்; கணிப்புகள் நடைபெறுகின்றன. மழை தணிந்தாலும் வெள்ளம் பல பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஜேர்மனி மட்டுமல்ல¸ அயல்நாடுகளான பெல்ஜியம்¸ நெதர்லாந்து¸ ஒஸ்திரியா¸ செக்குடியரசு மற்றும் சுவிட்சர்லாந்து நாகளிலும் சில பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதுடன்¸உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். முடிந்தால் சிறு உதவிகளைச் செய்வோம்!..
error

Enjoy this blog? Please spread the word :)