புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

54 வயது மனைவி மீது சந்தேகம்!! கனடாவிலிருந்து வந்து யாழில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் 65 வயது முதியவர்!!

நீண்ட காலமாக மனைவி பிள்ளைகளுடன் கனடாவில் வசித்து வந்த 65 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர், மனைவியை விவாகரத்து செய்வதற்கு சட்டத்தரணி ஊடாக விண்ணப்பித்துள்ளார். கடந்த வருட இறுதிப் பகுதியில் மனைவியை விட்டு யாழ்ப்பாணம் தனியே வந்து வலிகாமம் பகுதியில் உள்ள தனது சொந்த வீட்டில் குறித்த முதியவர் வசித்து வருகின்றார். கனடாவில் இருக்கும் போது மனைவியுடன் சண்டையிட்டு மனைவியைத் தாக்கிவிட்டே அவர் இங்கு வந்ததாகத் தெரியவருகின்றது. கனடாவில் உள்ள பிரபல கோவில் ஒன்றுக்கு மனைவி தொடர்ச்சியாக சென்று வருவதையிட்டே இவர்களுக்குள் சண்டை வந்ததுள்ளது. மனைவியுடன் குறித்த கோவிலுக்கு வரும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தே மனைவியை இவர் தாக்கியுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் வந்தும் குறித்த குடும்பஸ்தரின் சகோதரியின் வீட்டில் வந்து இது தொடர்பாக முறைப்பாடும் செய்துள்ளார். இதே வேளை இம் முதியவரின் மகள் திருமணம் முடித்து 3 வயதில் குழந்தையும் இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள மகளின் கணவனின் பெற்றோருக்கும் தனது மனைவி தொடர்பாக முதியவர் கூறியுள்ளார். இதனால் கடுப்பான மகள் மற்றும் மனைவி மற்றும் திருமணம் முடியாத நிலையில் இருக்கும் மகன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் உள்ள தமது வீட்டில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு முதியவருடன் முரண்பட்டுள்ளார்கள். இதனையடுத்தே மனைவியை விவாகரத்து செய்ய யாழில் உள்ள பிரபல சட்டத்தரணி ஒருவரை முதியவர் அணுகியுள்ளார். இதே வேளை முதியவருக்கு திருமணத்தின் போது கொடுத்த சீதன வீட்டை விட்டு வெளியேற்ற மனைவி மற்றும் பிள்ளைகள் தமது உறவினர்கள் மூலம் முயற்சி செய்ததால் அது தொடர்பாக முதியவரால் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை முதியவரின் நண்பர்கள் சிலரே முதியவருக்கு தவறான தகவல்களைக் கொடுத்து முதியவரை உசுப்பேற்றி மனைவியை விவாகரத்து வரும் அளவுக்கு சந்தேகப்பட வைத்துள்ளார்கள் எனவும் தனது தாய் மற்றும் ஒரு இளம் குடும்பஸ்தரின் புகைப்படங்களை மப்பிங் செய்து அவற்றை முதியவருக்கு கொடுத்துள்ளார்கள்.  அடிக்கடி பார்ட்டி என கூறி முதியவரை தம்மிடம் வரவழைத்தே இந்த திருவிளையாடல்களை அவர்கள் செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது. அவர்களில் சிலர் எனத் தெரிவித்து சிலரது புகைப்படங்களை முதியவரின் மகள் எமது ஊடகத்திற்கு அனுப்பியுள்ளார். சந்தர்ப்பம் வரும் போது அவற்றை நாம் வெளிப்படுத்துவோம்.