அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படவிருந்த தமிழ் குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி
அவுஸ்திரேலியாவில் இருந்து எதிர்வரும் 21ம் திகதி சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்படவிருந்த தமிழ் குடும்பத்திற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நாடு கடத்தப்படவிருந்த ராஜசேகரன் மாணிக்கம் குடும்பத்தின் சார்பில் அவரது புதல்வி வாணிஸ்ரீ அவுஸ்திரேலிய மக்களிடம் உதவியை நாடியிருந்த நிலையில் அவர்களது நாடு கடத்தல் தவிர்க்கப்பட்டுள்ளதுடன், நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளது.
சித்திரவதைக்குள்ளான டிக்கிரி! அமைச்சர் வெளியிட்ட உத்தரவு
அவுஸ்திரேலியாவில் பரிதாபமாக உயிரிழந்த ஏழு வயது சிறுமி
வாணிஸ்ரீ 12ஆவது வகுப்பில் படித்து வரும் நிலையில், தனது ஆண்டிறுதித் தேர்வை எழுதாமலே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகியது. ராஜசேகரனின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை இல்லை என்பதால், அவருக்கான மருத்துவ செலவுகளை செய்ய இயலாது என்று கூறி, அவரது குடும்பத்தை நாடு கடத்த அவுஸ்திரேலிய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று காலை அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.
“என்னால் அதை நம்ப முடியவில்லை. நீண்ட போராட்டத்தின் பின்னர் வெற்றி கிடைத்துள்ளது. எங்களுக்கு நாடு கடத்தலை குடிவரவு அமைச்சர் இரத்து செய்யதுள்ளார். இறுதி நேரத்தில் எங்கள் கனவு நனவாகிவிட்டது. இனி எந்த தடையுமின்றி எனது மகள் பரீட்சை எழுத முடியும். எவ்வித தடையும் இல்லை. நாங்கள் எங்கள் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்க முடியும். எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என ராஜசேகரன் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

